இந்தியாவின் பொருளாதார பலவீனத்தையும் தொலைநோக்குப் பார்வையின்மையையும் சீனா பயன்படுத்திக் கொள்கிறது.

27 April 2026  |  

Anand P. KrishnanJabin T. Jacob
Economy
Geopolitics

2025 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாத இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவருடைய விஜயமானது அதுவரைக்கும் தடைகளாக இருந்த அனைத்தையும் தகர்க்கும் வகையில் அமைந்தது. 2020 ஆம் ஆண்டின் கோடையில் நடைபெற்ற எல்லைப் பதற்றங்களுக்குத் தீர்வைக் காணும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள ஒத்துக்கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டில் (LAC) சங்கடமான, நம்பிக்கைத் தன்மையற்ற நிகழ்வுகள் நிகழ்ந்து வருவது வருத்தமளிப்பதாக உள்ளது. ஆனால் இந்தியா சீனாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு மீதான தடைகளையும், சீன வர்த்தகங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவைப் பெறுவதற்கான தடைகளையும் தளர்த்தி உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். டெல்லியும் பெய்ஜிங்கும் தங்களுக்கு இடையிலான நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. அத்துடன் நீர்நிலைத் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளன. மேற்கண்டவை அனைத்தும் 75 ஆம் ஆண்டின் இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களாகும். மேலும் சில மனம் கவரும் சொற்பிரயோகங்களும் பண்டைய நாகரிகங்கள்’, ‘உலகளாவிய தெற்கின் தலைவர்கள்’, ’டிராகன்யானை டேங்கோ வழக்கில் வந்துள்ளன.      

 சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக 50% வரிகளை விதித்திருந்தார். டிரம்பின் இந்த நடவடிக்கையே இந்தியா, சீனாவை நோக்கி திரும்புவதற்கான சமிக்ஞையாகக் கொள்ளலாம். மேலும் டிரம்பின் வரிகள் மீதான கவனத்தைச் செலுத்துவதைச் தாண்டிச் செல்வது முக்கியம். சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் சவாலைக் கையாள்வதில் இந்திய அரசாங்கத்தின் திறன் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தொலைக்காட்சியில் பேசியது குறிப்பிடத்தக்கது. அவர், “நான் என்ன செய்யப் போகிறேன்? ஒரு சிறிய பொருளாதாரமாக, பெரிய பொருளாதாரத்துடன் போட்டியிடப்போகிறேனா?” என்று கேட்டார்.

2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டதாகத் தோன்றுகின்றது. இந்தச் செய்தியானது பத்திரிக்கைக் குறிப்பு மூன்றில் உள்ளது. ஆனால் ஜெய்சங்கர் தன்னுடைய பலவீனத்தை ஒப்புக்கொண்டது, சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பிற்காலத்தில் ஏற்படும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் சீனர்களுக்கு மேலாதிக்கத்தை தருவதற்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

இருந்தபோதிலும், இந்தியாவின் சொந்த பொருளாதார பலவீனங்கள், குறுகிய காலத்திற்கான வலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தியாவின் வணிகங்கள் நீண்ட காலத்திற்கான உத்திகளை வகுக்கவும் திட்டமிடலும் இல்லாமல் போனதையும் குறிப்பிட வேண்டும். ஆத்மநிர்பார் திட்டத்துக்கான முன்னெடுப்புகள் பல இருந்த போதிலும் இந்தியா தனக்கான சிறந்த வாய்ப்பை வீணடித்துவிட்டதாகத் தோன்றுகிறது. சர்வதேச சூழ்நிலைகள் ஒருபக்கம் தாக்கம் செலுத்தினாலும், இந்தியாவின் சொந்த பொருளாதார கொள்கைகள் சிறந்தவையே என்பதைக் கூற வேண்டும். இந்தியாவில் மத்திய மாநிலங்களுக்கு இடையேயான “கூட்டுறவு கூட்டாட்சி” நடைமுறைப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருப்பதும் உண்மையே. ஆனால், பெரும் பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்ட இந்திய மாநிலங்களின் பங்கும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

மையப்படுத்திய அரசானது மத்தியிலோ, மாநிலத்திலோ நடைபெறுவதும் வங்கிகளின் கடன் கொடுக்கும் முறையிலும் சில சிக்கல்கள் இருப்பதும் உண்மையே. மேலும் உற்பத்தியையும் ஊக்கத்தொகையையும் இணைக்கும் முறையிலும் மேம்பாடு தேவையாக உள்ளது. இலக்கை நோக்கிய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தேவைப்படும்போது துணிந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் தொழிற்துறை ஜாம்பவான்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றூம் மேம்பாட்டில் போதிய கவனமும் முதலீடும் செலுத்தவில்லை என்பதைப் பதிவு செய்தே ஆக வேண்டும். இதனை சிறு ஒப்பீடு செய்வதன் மூலம் அறியலாம். சீன தொழிற்துறை நிறுவனங்கள் 77% பங்களிக்கின்றன ஆனால், இந்தியாவில் 36.4% மட்டுமே பங்களிக்கின்றன. இவற்றில் பெரும்பான்மை உயிரி தொழில்நுட்பத்திலும் தகவல் தொழில்நுட்பத்திலும் செல்கின்றன. 

சீனாவில் மையப்படுத்தப்பட்ட அரசாங்கமும் சர்வாதிகாரத்தின் அளவும் என்னவாக இருந்தாலும் முதலீடு செய்வதிலும் தொழில்நுட்பங்களில் பந்தயம் கட்டுவதற்கும் எள்ளளவும் தயக்கமில்லாமல் கயிற்றின் மீது பயணிக்கிறார்கள். டீப்சிக் ஏஐ மூலம் நிரூபிக்கப்பட்ட அதிகமான பலன்களைக் குறித்த நன்மைகளை சீனர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையே மேற்கண்ட தரவுகள் நிரூபிக்கின்றன.

நிதி ஆயோக்கும் இந்திய தொழிற்துறையும் சீனாவுடன் இணைந்து பொருளாதார நடவிடிக்கைகளை மேற்கொண்டால் பெரும் இலக்குகளையும் சாதனைகளையும் படைக்க முடியும் என்று கருதுகின்றன. இந்தியாவின் இத்தகைய கருதுகோளானது சீனாவின் அரசியல் பொருளாதாரத்தைக் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமையையே காட்டுகின்றது. சீனாவில் தனியார் நிறுவனமோ அல்லது அரசு சார்ந்த சிறுவனமோ எதுவாக இருப்பினும் அவர்களுக்கு இலாபம் என்றால் என்ன என்பது குறித்து நன்றாகவே தெரியும். சீனாவில் தனியார் துறை நிறுவனங்களும் அரசு துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். ஆனால் இந்திய தொழிற்துறையினரிடம் கேட்டால் அதைச் சரியாக செய்ய முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மேலோட்டமாக பார்க்கும்போது சீன தனியார் துறையின் சுறுசுறுப்பையும் நெகிழ்வுத்தன்மையையும் கண்டு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால், சீன அரசானது தனியார் துறை நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே வர்த்தகத்தில் ஏலம் செய்ய வேண்டும் என்பது உள்ளார்ந்த அர்த்தமாகும்.  

மேற்குறிப்பிட்ட அறிக்கை எண் மூன்று குறிப்பிட்ட எந்த சூழ்நிலையும் மாறவில்லை ஆனால், சீனா பற்றிய இந்தியாவின் கொள்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு குறை கூறுவதை நிறுத்த வேண்டும். இந்திய தொழிற்துறையானது தன்னுடைய உண்மையான பலத்தையும் தேவையான முதலீடுகளையும் குறித்த தேர்வுகளையும் சரியாக செய்யாததே காரணமாக உள்ளது. நிதி ஆயோக் சீனாவுக்கான முதலீட்டுக் கதவுகளை திறந்ததுடன் இந்தியாவின் பாதுகாப்பு அனுமதி இல்லாமல் 24% வரை பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று கூறியுள்ளது. இந்த 24% என்பதை எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்துள்ளார்கள்? அயல்நாட்டு முகவர்களுக்கு எவ்வித அடிப்படைக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதி தருவது என்பது இந்தியா போன்ற வளரும் நெகிழ்வுத்தன்மை கொண்ட சந்தையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.  

இந்தச் சூழ்நிலையில் சீனாவுக்கு இந்திய சந்தையும் இந்தியாவுக்கு சீன முதலீடும் தேவை என்பதைத் தவிர்க்க இயலாததாகும். சீனாவின் அளவுக்கு அதிகமான உற்பத்தித் திறன் அந்நாட்டுக்கு ஒரு வகையில் பொருளாதார பலவீனமாகும். மேலும் அந்நாட்டின் நிறுவனங்களுக்கு இந்தியா போன்ற பெரிய சந்தை தேவை என்பதுடன் சீனாவின் பணவாட்ட அழுத்தத்துக்கு தீர்வாக அமையவும் வாய்ப்புள்ளது. புது தில்லியின் சீனா குறித்த புரிதல் இல்லாத கொள்கைகளும் ஆய்ந்தறியாமல் உடன்படுவதும் தவிர்க்க வேண்டியவைகளாகும். இந்தியா தன்னுடைய முக்கியமான அம்சமான மத்திய – மாநில கூட்டாட்சியை வலுப்படுத்த வேண்டும். அத்துடன் இந்திய தொழிற்துறையானது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் பெரும் முதலீடுகளைச் செய்ய வேண்டும். மேற்கண்டவற்றுடன் வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கினால் இந்தியாவானது தன்னிறைவு வளர்ச்சியினை அடையும்.

இந்தியா மேற்கண்டவற்றை உள்ளடக்கிய பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைச் செய்யாமல் சீனாவுடன் உடன்படிக்கை மேற்கொள்வது பொருந்தா ஒன்றாகும். மேலும் அத்தகைய நடவடிக்கைகள் இந்தியா – சீனா இரண்டுக்குமான எல்லைக் கோட்டுடன் கூடிய இராணுவ அழுத்தத்திலும் அடங்கி விடும். இச்சூழ்நிலை சீனாவுக்கு சாதகமாக அமையவே வாய்ப்புகள் அதிகம்.   


This article was originally published in Malayalam as Anand P. Krishnan and Jabin T. Jacob.2025 ‘അക്കരപ്പച്ചയോ ചൈന’ (Is the grass greener in China?). Mathrubhumi. 4 September.

Translated by Kalathi Veerasamy