
19 August 2025
மகாபோதி கோயிலின் தெய்வ நிந்தனை இந்தியாவின் சாப்ட் பவரைத் தாக்கியுள்ளது
புத்தருடைய நாட்காட்டியில் மிகவும் புனிதமான நாளான புத்த பூர்ணிமா இந்திய அரசாங்கத்தால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புத்தரின் பிறப்பு, விழிப்புணர்வு மற்றும் மறைவை நினைவு கூறும் வகையில் இவ்விழா நடைபெற்றது. தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள புத்தருடைய நினைவுச் சின்னங்களுக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு டாக்டர். அம்பேத்கர் பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்களும் பல பௌத்த நாடுகளின் அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாகச் சர்வதேச பெளத்த கூட்டமைப்பின் சார்பில் புத்தருடைய வாழ்வைக் குறித்தும் நினைவுச் சின்னங்கள் குறித்தும் வியட்நாமின் நான்கு நகரங்களில் புத்தரைக் குறித்த காணொளிகள் திரையிட திட்டமிடப்பட்டது. தோராயமாகப் பதினெட்டு இலட்சம் வியட்நாம் மக்கள் இந்நிகழ்வில் பங்குபெற்றதுடன் புத்தருடைய நினைவையும் போற்றினர். புத்தரின் நினைவுச் சின்னங்களைப் போற்றும் நிகழ்வுகளில் பங்குபெறும் எவரும் புத்தரின் உண்மையான இருப்புக்கு சமமாகக் கருத வேண்டும் என்று நினைத்தனர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புத்தரின் பிப்ரவா ஸ்தூபியின் நினைவுச்சின்னங்களின் – சொதப்பி (Sotheby’s) என்ற நிறுவனம் நடத்தயிருந்த – ஏலத்தை இந்திய அரசாங்கம் கடைசி நேரத்தில் நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இந்த ஏலத்தை நிறுத்த முன்வைக்கப்பட்ட வாதமானது, ஐம்பது இலட்சத்துக்கும் (500 million) அதிகமான பெளத்தர்களுக்கு உரிய புத்தரின் நினைவுச்சிங்கள் தனியார் விற்பனைக்கு உட்பட்டதல்ல என்பதாகும். இதனைக் கண்டுபிடித்த வில்லியம் கிளாக்ஸ்டன் பெப்பே (William Claxton Pepe) அவர்களுக்குச் சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டிருந்தாலும் கூட காலனியத்தை முற்றிலுமாக நிறுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏலம் நிறுத்தப்பட்டது.
மேற்கூறிய அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடனும் மென்மையான சக்தியாகவும் (soft power) விளங்குகின்றன. இது 2023 ஆம் ஆண்டு இந்தியா தொகுத்த ஜி-20 மாநாட்டில் வெளிப்பட்டதுடன் தேசிய, சர்வதேசிய நிகழ்வுகளின் ஊடாகவும் அறியமுடிகின்றது. இந்தியாவின் நேரடி எதிரியாக தோற்றம் தரும் சீனாவில் தோராயமாக 20 இலட்சம் பெளத்தர்கள் வசிப்பதாக அடையாளப்பற்றுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவின் இத்தகைய நகர்வுகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
புத்தரின் ஏராளமான வாழ்க்கை இந்தியாவிலுள்ள பல்வேறு தலைகளுடன் பிணைந்துள்ளது என்ற நிலையில் (இன்னும் ஏராளமான புத்த மதம் சார்ந்த அகவாழ்வுகள் நடத்த வேண்டியுள்ளன), பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள பெளத்தர்கள், தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாட்டில் பயணம் மேற்கொள்கின்றனர். செல்வச்செழிப்பான பெளத்த பின்புலம் கொண்ட நாடுகள் பெளத்தம் சார்ந்த அகவாழ்வுகள் மேற்கொள்ளவும், புதிய மடாலயங்களை கட்டியெழுப்பவும் ஆர்வம் காட்டுகின்றன. புத்தரின் இரண்டாவது தர்ம சக்கரத்தின் (Second Wheel of Dharma) அடிநாதமாக விளங்கும் இராஜகிரகம் (Rajgriha), நாளந்தா (Nalanda) போன்றவற்றைச் சான்றாகக் கூறலாம். மேலும் இரண்டாவது கோட்பாட்டில் வெறுமையையும் (emptiness), பாராயணம் (recitation) வலியுறுத்தியிருப்பதை நினைவில் கொள்ளலாம்.
இந்நிலையில் புத்த பூர்ணிமா நாளில் பீகாரில் உள்ள மகாபோதி கோயிலின் கருவறையில் வலுக்கட்டாயமாக நடைபெற்ற இந்து மத சடங்குகள் - அதன் காழ்ச்சிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது - சர்வதேச பெளத்த சமூகத்திற்கு அதிர்ச்சியளிக்கின்றன. புத்தரின் சொந்த விழுப்பின் தளமாகிய இந்த கோவில் பெளத்தர்களுக்கு உண்மையான விழிப்புணர்வினை அளிப்பதும், தீர்க்கதரிசனம் பெறும் புனிதத்தளமாகவும் உள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த சாக்கியமுனி பெளத்த மடாலயம் எந்த அமைப்பிற்கோ, எந்த ஒரு மதத்துக்கோ தொடர்புடையதல்ல. ஆனால் பீகாரின் ஆளுநர், மாநில காவல்துறையினர் பெளத்த மடாலயத்தில் நிகழ்ந்த வன்முறைகளைக் கண்டிக்க வேண்டியதைச் சர்வதேச அரங்கில் உற்றுநோக்கவேண்டிய அவசியத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற அவமானத்தை நியாயப்படுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.
சமீப காலங்களில் இந்திய பெளத்தர்களின் இரு பெரும் பிரிவுகளான இமாலயன் (Himalayan), நவயானம் (Navayana) பிரிவைச் சேந்தவர்கள் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்கள் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 1949-ஆம் ஆண்டின் மகாபோதி மேலாண்மைச் சட்டத்தை (Mahabodhi Management Act) இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் கோருகின்றனர். மேலும் இதன் அடிப்படையில் பெளத்தர்கள், மற்றும் பெளத்தர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து நடத்திவரும் கோவில் நிர்வாகத்தை தடுத்து, பௌத்தர்கள் மட்டும் நிருவகிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளனர். சில தசாப்தங்களாக நடைபெற்று வரும் கோரிக்கையின் சமீபகால போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் உள்ளது. பெளத்த துறவிகளில் சீர்திருத்தவாதியான அநாகரிக தர்மபாலாவின் நீண்ட கால கோரிக்கையாக முன்வைக்கப்ப்படுவது என்னவென்றால் இந்துக்களின் ஆதிக்கத்திலிருந்து மகாபோதி விடுவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
மகாபோதியின் நிர்வாகம் தொடர்பான இந்த சிக்கல் தீர்க்கப்படாமல் இருக்கின்ற வகையில், உலக அரங்கில் பெளத்தம் தொடர்பான மென்மையான அதிகாரத்தில் (soft power) இச்சம்பவம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.. உலகம் முழுவதிலும் இருக்கும் பெளத்தர்களுக்கு மகாபோதிதான் முக்காலத்துக்கும் (நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம்) இதயமாக இருக்கும் இந்த தருணத்தில் அதன் புனிதத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் கடமையும் இந்திய அரசாங்கத்துக்கு உள்ளது. இந்திய அரசாங்கம் உலகெங்கிலும் ‘விஷ்வ குரு’ என்ற நிலைக்கு முன்நகரவும் மதவாத ஒற்றுமைகளை உண்மையாகவும் பின்பற்ற வேண்டும்.
பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களை ஒன்றிணைத்து இணக்கமாக வழிபடுவதை ஊக்குவிக்க இந்தியாவுக்கு மகாபோதி ஒரு சிறந்த வாய்ப்பாக மாற்ற உகந்த நேரமாகும். அதே நேரத்தில் பல மதங்களைத் தோற்றுவித்த மகான்களை ஓர் உயர்ந்த நோக்கத்துக்காக ஒன்றிணைக்கும் இடமாகவும் பார்க்கச் செய்யலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக பஞ்சாபின் அமிர்தசரசில் இருக்கும் சீக்கிய சமூகத்தின் தங்கக் கோயிலைக் (Golden Temple) கூறலாம். இந்தக் கோயில் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த புனிதத் தலத்துக்கு வருகை புரிபவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சீக்கிய பிரிவைச் சாராதவர்கள் என்பது முக்கியமானதாகும். கத்ரி பஞ்சாபியர்களும் திபேத்திய பெளத்தர்களும் நம்பிக்கையுடன் செல்லும் இடமாகவும் இருக்கின்றது. ஏனென்றால் அவர்களின் சொந்த தெய்வீக பதிப்பாய் குரு நான்கெய் - அல்லது திபெத்தியர்கள் அழைக்கும் லாமா நானக் - எண்ணி செல்கின்றார்கள்.
இக்கட்டுரையின் முடிவாக, உலக அரசியலில் நிலையற்ற தன்மை நடக்கும் இந்த தருணத்திலும் அரசாங்கங்களுக்கு இடையிலான கூட்டணிகள் நாளுக்கு நாள் இல்லை மணிக்கு மணி மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியா தன்னுடைய ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்தி வெளியுறவுக் கொள்கையைச் செம்மைப்படுத்த முடியும். இந்தியப் பிரதமர் மோடி அவர்களே ஆமோதித்த பெளத்தம் ஒரு சிறந்த மென்மையான சக்தியாகும் (soft power). இந்த சக்தியைக் கொண்டு இமயமலையை எல்லைகளாக பகிர்ந்து கொள்ளும் நாடுகளையும் ஆசிய நாடுகளையும் அதற்கு அப்பால் இருக்கும் நாடுகளையும் ஒன்றிணைக்கும் சக்தியாக திகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய அரசாங்கம் பீகாரில் உள்ள மகாபோதியில் நடைபெற்ற தேவையற்ற மத கலவரங்களை மேலும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அவ்வாறு தடுத்து மதங்களுக்கு இடையில் இணக்கமான சூழலை உருவாக்கினால் இந்தியாவால் ஆகச் சிறந்த மென்மையான சக்தியாக உருவெடுக்க முடியும் அப்படி செய்யாவிட்டால் பெரும்தீங்கையே எதிர்கொள்ள நேரிடும். இந்திய அரசாங்கம் தீர்க்கமாக செயல்படவேண்டிய நேரத்தில் உள்ளது.
Original: Kaveri Gill. 2025. ‘Mahabodhi Temple Sacrilege Has Hit India’s Soft Power’. The Tribune. 24 May.
Translated by Kalathi Veerasami
Share this on: